TA-2111
Tamil

Vanankalilum uyara

Vanankalilum uyara

24
views
பல்லவி

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும் செழிப்பை உண்டாக்கும் தண்ணீர் தடாகமும் நீரே எந்தனின் கோட்டையும் நீரே எந்தனின் வெளிச்சமும் நீரே நீரே நல்லவர், நீரே வல்லவர் நீரே பரிசுத்தர், நீரே என் ரட்சகர்

1ம் சரணம்

உம்மை நோக்கி கூப்பிடும் நாளில் மறு உத்தரவு எனக்களிப்பீர் நீரே நல்லவர் நீரே வல்லவர் நீரே பரிசுத்தர் நீரே என் ரட்சகர்

2ம் சரணம்

சகலத்தையும் சிருஷ்டித்தவரே நீர் சர்வ வல்லவரே நீரே சிறந்தவர் நீரே உயர்ந்தவர் நீரே மாறாதவர் நீரே பாத்திரர்

3ம் சரணம்

உமது தயவு எனக்கு வேண்டுமே உமது கிருபை எனக்கு போதுமே நீரே என் அரண் நீரே என் பெலன் நீரே என் கோட்டை நீரே என் ரட்சகர்

4ம் சரணம்

ஒத்தாசை வரும் பர்வதம் நீரே அடைக்கலமானவர் நீரே யெகோவாயீரே, யெகோவா ஷம்மா யெகோவாரூவா, யெகோவா ரப்பா

5ம் சரணம்

உதவி வரும் கன்மலை நீரே எனக்கு போதுமானவர் நீர் மகிமை நிறைந்தவர் மாட்சிமை உடையவர் வல்லமை நிறைந்தவர் உலகை ஆள்பவர்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.