TA-2112
Tamil

வனாந்திரத்தில் அவாந்தரவெளியிலும்

Vananthirathilae avantharaveliyilum

29
views
பல்லவி

வனாந்திரம் வயல் வெளியாகும் நேரமே வெட்டாந்தரை நீர்த்தடாகமாக மாறுமே வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும் காடு வெளி களித்து செழிக்கும் லீபனோனின் மகிமை வருமே கர்மேல் சாரோன் அழகு பெறுமே

1ம் சரணம்

தளர்ந்த கைகளை திடப்படுத்தி தள்ளாடும் கால்களை பெலப்படுத்தி திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம் பதில் அளிக்க தேவன் வருவார்

2ம் சரணம்

குருடர்களின் கண்கள் காணுமே செவிடர்களின் செவிகள் கேட்குமே முடவன் மானைப் போல துள்ளுவான் ஊமையன் நாவும் பாடுமே

3ம் சரணம்

மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே நித்திய மகிழ்ச்சி தலைமேல் தங்குமே சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகுமே ஆசீர்வாத மழைபொழியுமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.