♪♫
TA-2120
Tamil
Vanthalume ennalume
Vanthalume ennalume
0
views
பல்லவி
வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம்.
1ம் சரணம்
சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.
2ம் சரணம்
சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள் சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!
3ம் சரணம்
சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே.
4ம் சரணம்
உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் – ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே.
5ம் சரணம்
மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை – உன்றன் வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.