ஆயிரம் நாவுகள் போதாதே
Vanthen iyya um patham
வந்திடுமே இயேசுவண்டை சேர்ந்திடுமே பாவப் பாரம் தீர்ந்திடுமே வரும் பாவியை அணைப்பேனென்று வாக்கு அன்பாய் அளித்தனரே
பாவத்தில் மாண்ட உனைப் பங்கமின்றி விடுவிப்பேனென்கிறாரே அன்பரின் சத்தம் கேட்கும் நாளில் அன்பாய்ப் பாதம் அண்டிக்கொள்வீர்
செல்வத்தை நாடி ஓடிச் செல்வாயோ? சேர்த்திடுமே நரகில் எல்லாம் விழல் என்று எண்ணி நேசர் பாதம் அண்டிக்கொள்வீர்
மாயமே மண்ணுலகில் யாவதுமே மனக்கவலை தீருமே மயங்காமலே மனதில் தினம் மகிபரன்பில் அமிழ்ந்து நட
மரணமே நினையா நேரமதில் வந்துனைச் சந்திக்குமே மரணவழி விட்டுப் பரன் மாட்சி வழி நடந்திடுமே
மறப்பாயோ மாட்சிமை தான் மறந்து மானிடர்க்காய் மாண்டவரை மாறாப் பரிசுத்தமீந்து மன்னன் மார்பிலணைத்திடுவார்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.