♪♫
TA-2132
Tamil
வரவேணும் எனதரசே
Varavenum ena tharase
28
views
பல்லவி
வரவேணும் எனதரசே மனுவேல், இஸ்ரேல் சிரசே அருணோதயம் ஒளிர் பிரகாசா அசரீரி ஒரே சரு வேசா
1ம் சரணம்
வேதா கருணாகரா மெய்யான பராபரா ஆதார நிராதரா அன்பான சகோதரா தாதாவும் தாய் சகலமும் நீயே நாதா, உன் தாபரம் நல்குவாயே
2ம் சரணம்
படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா இடையர் குடிலிடை மேவி எழுந்தாய் இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய்
3ம் சரணம்
வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே ஞானாகரமே, நடு நிலை யோவா நண்பா, உனத நன்மையின் மகா தேவா!
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.