TA-2135
Tamil

வருஷப் பிறப்பாம் இன்று

Varusa pirapam endru

24
views
பல்லவி

வருத்தப்பட்டு பாரம் சுமப்போரோ வருவீர் ஏசு அழைக்கிறாரே சிலுவை நிழல் இளைப்பாறுதல் சோரும் மனதில் கிடைத்திடுமே

1ம் சரணம்

தியாக பலியாய் ஏசு மரித்தார் தூய அன்பே மாறிடாதே சேற்றினில் அமிழ்ந்தும் தூக்கி எடுப்பார் சொந்த இரட்சகராய் ஏற்றுக் கொள்வாய்

2ம் சரணம்

கள்ளர் நடுவே கபடமில்லாத கர்த்தர் உனக்காய் குருசினிலே வாய் திறவாமல் மனம் பதறாமல் வேதனை பாடு சகித்தனரே

3ம் சரணம்

கொல்கதா பாதை விலகிவிடாதே கர்த்தரின் பின்னே நடந்திடுவாய் வஞ்சிக்கும் உலகம் அதையோ நம்பாதே வாஞ்சையாய் மோட்சம் சுதந்தரிப்பாய்

4ம் சரணம்

முடிவோ மகிமை சிலுவையின் பாடு முள்கிரீடம் பொன்னாகுமே உன் சித்தம் நொறுங்க அவர் சாயலாவாய் உத்தமனாக விளங்கிடுவாய்

5ம் சரணம்

உன்னை என்றுமே கைவிடமாட்டார் உன்னை விட்டவர் விலகிடாரே மாந்தனைப் போலவர் மாறுவதில்லை மெய்வழி காட்டி நடத்திடுவார்

6ம் சரணம்

துன்ப வெள்ளத்தில் மூழ்கிடும் போது தாங்கும் கரத்தால் தூக்கிடுவார் இன்னும் ஒத்தாசை இயேசு அருள்வார் உன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.