TA-2138
Tamil

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது மகனே

Vathai unthan koodarathai

22
views
பல்லவி

வற்றாத நீரூற்று போலிருப்பாய் வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய் கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய் காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

1ம் சரணம்

வாழ்க்கால்கள் ஓரம் நடப்பட்ட மரமாய் எப்போதும் கனி கொடுப்பாய் தப்பாமல் கனி கொடுப்பாய்

2ம் சரணம்

ஓடும் நதி நீ பாயும் இடத்தில் உயிரெல்லாம் பிழைத்திடுமே சுகமாக வாழ்ந்திடுமே

3ம் சரணம்

பலநாட்டு மக்கள் உன் நிழல் கண்டு ஓடி வருவார்கள் பாடி மகிழ்வார்கள்

4ம் சரணம்

பஞ்ச காலத்தில் உன் ஆத்துமாவை திருப்தியாக்கிடுவார் தினமும் நடத்திடுவார்

5ம் சரணம்

கோடைக் காலத்தில் வறட்சிக் காலத்தில் அச்சமின்றி இருப்பாய் - நீ ஆறுதலாய் இருப்பாய்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.