எல்லா ஜீவாத்துமாவும்
Veliyil Ooril Yaavum
வெள்ளை புறாவே உன்னைப் போலவே களங்கம் நீங்கியே விண்ணில் நீந்தவே ஆசை நெஞ்சிலே ஆயிரம் நாளுமே உயர உயர உயரும் உன்னதமே சிகரம் கர்த்தருக்கு காத்திருந்தால் கனவுகூட சாத்தியம்
ஆவியால் பிறந்திடும் அனுபவம் மகிமைதான் பேதைமை நீங்கிட பாதையும் மாறிடும் பாவங்கள் தொலைந்திட தீமைகள் ஒழிந்திடும் ஆணவம் போய்விட ஆனந்தம் பிறந்திடும்
எண்ணமும் இதயமும் காயமும் காலமும் தூய்மையின் சிறகுகள் சுமந்து நான் பறக்கவும் மென்மையாய் வாழவும் உன்னதம் காணவும் ஆண்டவா நடத்திடும் ஆசைகள் அழித்திடும்
வானம் என் எல்லைதான்: இயேசு என் பக்கம்தான் ஆண்டவர் சொந்தம் நான்: தேற்றுவார் அனுதினம் ஆவியால் நிரப்புவீர் அழகினை கூட்டுவீர் கர்த்தரை காட்டுவேன் களிப்புடன் வாழுவேன்.
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.