விளைந்த நிலம் ஏராளமே
Vilaintha Nilam Aeraalamae
விழிப்புடன் செயலாற்றுவோம்! விழித்திருப்போம்! வேகம் உழைத்திடுவோம்! கழிந்திடும் நாட்களை உணர்ந்திடுவோம்! இடைவிடாது ஜெபித்திடுவோம்! இந்தியரை நாம் சுதந்தரிப்போம்!
விரைந்து நெருங்கிடும் அவர் வருகை விளைந்து நிற்கும் வயல் வெளிகள் தாமதிக்க இனி காலமில்லை சிலுவை வீரரே ஆர்த்தெழுவீர்!
அத்தி மரமும் துளிர்த்ததே ஆண்டவர் வருகையும் நெருங்கியதே விதைத்தவர் முன்னோர் அறுப்பவர் நாமே களஞ்சியம் சேர்ப்போம் விரைந்திடுவோம்!
இந்தியர் அனைவரும் நமது ஜனம் ஆண்டவர் இயேசுவின் பின்னே வர சுவிசேஷத் தீபம் ஏற்றிவைப்போம் மங்கள நித்திய வாழ்வளிப்போம்!
தூய்மை வாழ்வை அணிந்திருப்போம் தூயவர் வருகைக்குக் காத்திருப்போம் வஞ்சகப் பேயினை ஜெயித்திடுவோம் மங்கா விளக்காய் எரிந்திடுவோம்!
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.