TA-2153
Tamil

தேசம் பாஷை ஜாதிகள் ஒன்றோடொன்றெதிர்க்குதே

Vilithelumbi vegam

22
views
பல்லவி

விழித்திருந்து நாமும் ஜெபம் செய்குவோம் வருகிறார் நம்மைச் சேர்க்க கிறிஸ்தேசுராஜா ஏங்கி அழைப்போம் ஏசுவே வாரும்

1ம் சரணம்

வேண்டுதல், ஜெபங்கள், துதி ஸ்தோத்திரம் விண்ணப்பங்கள் அனுதினம் ஏறெடுப்போம் நல்லொழுக்கம் பயபக்தியோடு-அமைதியாய் எல்லோரும் புவில் நல்லோராய் மனம் மாற தேவ சித்தம் சத்தியம் இரட்சண்யம் அறிந்திட தேசத்தின் அதிகாரிகள் நீதியாய் அரசாண்டிட சேர்ந்து ஒன்றாய்க் கூடி சபையோர் ஜெபிப்போம் சோர்ந்து போகாமல் நாம் புலம்பி ஜெபிப்போம் சிலுவை சுமந்த இயேசுவை நோக்கி சிந்தை குலுங்க கதறி ஜெபிப்போம்

2ம் சரணம்

நோவா காலம்போல் லோத்தின் நாட்கள் போல் நரர் பலர் மிருகம்போல் வாழ்கின்றனர் அழிந்திடும் மனிதரை மீட்க-உருக்கமாய் அழுது போராடி ஜெபம் செய்வோம் இயேசுவின் திரு இரத்தமே பாவதோஷம் நீக்குமே விசுவாச ஜெபமே உலகை ஜெயிக்குமே தேசத்தில் முன்மாரி பின்மாரி பொழியுமே நாசம் மோசம் நீங்கி சமாதானம் தங்குமே வேகம் இறையாட்சி இறங்க ஜெபிப்போம் வேதம் நிறைவேற கருத்தாய் ஜெபிப்போம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.