♪♫
TA-2157
Tamil
Vinnorin Veantharae
Vinnorin Veantharae
0
views
பல்லவி
விண்ணுக்கும் மண்ணுக்கும் சொந்தக்காரர் நீர்தானே உம்மையன்றி யாருமில்லையே இந்த உலகிலே உம்மையன்றி யாருமில்லையே – 2
1ம் சரணம்
நான் பார்க்கும் சூரியனும் நான் பார்க்கும் சந்திரனும் உமது கரத்தின் கிரியைகள் தானே – 2 எனக்கென்று பூமியிலே எதுவுமில்ல – 2 சொந்தமென்று சொல்லிக்கொள்ள உம்மையன்றி யாருமில்ல – 2 உம்மையன்றி யாருமில்ல – 2
2ம் சரணம்
என் தாயின் கருவினிலே உருவான நாள் முதலாய் உமது சார்பாக பூமியிலே விழுந்தேனே – 2 அன்று முதல் இன்று வரை ஆதரித்த தெய்வமல்லோ – 2 சொந்தமென்று சொல்லிக்கொள்ள உம்மையன்றி யாருமில்ல – 2 உம்மையன்றி யாருமில்ல – 2
3ம் சரணம்
திக்கற்ற பிள்ளைகளில் தகப்பனும் நீர்தானே ஏழையின் கூக்குரலை கேட்டு பதில் செய்பவரே – 2 சிறுமையானவனை உயரத்தில் நிறுத்தியே – 2 மந்தையைப் போல் பெருகச்செய்து ஆசீர்வதிப்பவரே – 2 ஆசீர்வதிப்பவரே ஆசீர்வதிப்பவரே