♪♫
TA-2158
Tamil
திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி,
Vinthai christyesu raja
27
views
பல்லவி
விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை – 2 சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்
1ம் சரணம்
திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே
2ம் சரணம்
உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன்
3ம் சரணம்
சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ துயரோடன்பு, மன்னா இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன்
4ம் சரணம்
இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.