TA-2161
Tamil

விசுவாச கப்பலில் யாத்திரையே

Visuvasa kapalil yathirai

24
views
பல்லவி

விசுவாசமே நம் ஜெயமே விலைமதியாதோர் நல் பொக்கிமே விசுவாசமாம் கேடகம் தாங்கி விசுவாச பாதையில் முன்னேறுவோம்

1ம் சரணம்

மலைப்போன்ற துன்பங்கள் நெருங்கிடுனும் மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதி வருத்தம் போராட்டம் வந்தும் விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம்

2ம் சரணம்

எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே ஏகி சென்றான் பக்தன் யோசுவாவும் விசுவாசத்தாலே முன்னேறியே நாம் வல்லவர் பெலத்தால் முன்னேறுவோம்

3ம் சரணம்

விசுவாசம் காத்திட தம் ஜீவனை விசுவாச வீரர்கள் இழந்தனரே நல்ல போரட்டம் போராடியே நம் விசுவாசத்தை என்றும் காத்துக்கொள்வோம்

4ம் சரணம்

விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும் திட மனதுடன் நிலைத்திருப்போம் வாக்கு மாறாத கர்த்தரை நிதமும் விசுவாசத்தோடு நாம் பின் செல்லுவோம்

5ம் சரணம்

பாவங்கள் பாரங்கள் அகற்றியே நாம் பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம் இயேசுவை நோக்கி சீராக ஓடி விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.