TA-2162
Tamil

பொற்கிரீடம் பெற்றுக்கொள்வோமாகவே,

Visuvasathodu satchi

24
views
பல்லவி

விசுவாசிப்பீர் தேவஜனமே - இன்றே தேவனின் மகிமையைக் காண்போம் ஆதியும் அந்தமும் இயேசுவின் நாமமே ஆசீர்வதித்திடும் அற்புத நாமமே

1ம் சரணம்

ஆள்கின்ற பாவத்தின் கறை திரைகளும் காணாமல் மாய்ந்திடுமே இயேசுவின் இரத்தத்தால் வானிலும் பூவிலும் உயர்ந்த நாமமே மாவல்ல இரட்சிப்பையே நல்கிடுமே

2ம் சரணம்

மாறாத நோய்களும் தீராத வியாதியும் மாறிடும் இக்ஷணமே கல்வாரி ஜீவனால் மரித்தும் ஜீவிக்கும் இயேசுவின் நாமமே மாண்டோரை உயிர்ப்பிக்கும் நிச்சயமே

3ம் சரணம்

சீறும் கடலையும் முற்றும் அமர்த்தியே தேற்றினார் சீஷரையே ஜீவனின் வார்த்தையால் சர்வமும் ஜெயித்த வல்லவர் நாமமே மாற்றிடும் சோதனைகள் யாவையுமே

4ம் சரணம்

மண்ணோரை விண்ணோராய் மாற்றிட இயேசுவே மண்ணிலே மரித்துமே ஜீவனாய் உயிர்த்தார் சாவினை ஆவியால் வென்றதோர் நாமமே சாவாமை அளித்திடும் அற்புதமாய்

5ம் சரணம்

தேகத்தைக் கிழித்தும் இரத்தத்தைச் சிந்தியும் திறந்தார் புதியதோர் ஜீவனின் மார்க்கமே மகா பரிசுத்தர் மாறாத நாமமே சாலேமில் சீயோனிலே சேர்த்திடுமே

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.