TA-2178
Tamil

tt%எருசலேமிலிருந்து ஒருவன் எரிகோவிற்குச் சென்றான்

Yerusalemlirunthu oruvan

22
views
பல்லவி

எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் உன் அலங்கத்திற்குள்ளே சமாதானம் அரண்மனைக்குள்ளே பூரண சுகம்

1ம் சரணம்

கர்த்தர் உன்மேல் மனம் இறங்குகிறார் ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் தயை செய்யும் காலம் வந்தது குறித்த நேரமும் வந்துவிட்டது விழித்தெழு சீயோனே வல்லமையை தரித்துக்கொள்

2ம் சரணம்

துரத்துண்ட இஸ்ரவேலரை துரிதமாய் கூட்டிச்சேர்க்கின்றார் சீயோனை திரும்ப கட்டுகிறார் மகிமையிலே காட்சியளிப்பார்

3ம் சரணம்

பூமியின் ஜனங்களுக்குள்ளே புகழ்ச்சியும் கீர்த்தியுமவாய் உன்னிலிருந்து வேதம் வெளிப்படும் கர்த்தர் வசனம் பிரசித்தமாகும்

4ம் சரணம்

இரவும் பகலும் மௌனமாயிராத ஜாமக்காரர் உன் மதில்மேல் அமரிக்கையாய் இருப்பதில்லை அமர்ந்திருக்க விடுவதில்லை

5ம் சரணம்

மலைகள் குன்றுகள் நடுவே மிக மேலாய் நிலைநிறுத்துகிறார் மக்கள் இனம் தேடி வருவார்கள் ஓடி வந்து மீட்படைவார்கள்

6ம் சரணம்

கர்த்தர் உன்னை விரும்பினபடியால் தெரிந்துகொண்டார் உறைவிடமாய் – அவர் அமர்ந்திருக்கும் அரியணை நீ தான் அகிலத்திற்கும் வெளிச்சம் நீ தான்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.