♪♫
TA-2195
Tamil
விண்ணுக்குரிய மகிமை வாழ்வை
Yesuraajanae Um Varukaikkaana
0
views
பல்லவி
இயேசு ராஜா - மனுக்குல தேவா ஏன் இந்த ஏழையின் கோலம் - ஐயா
1ம் சரணம்
தோளின் மேல் சிலுவை தூக்கிச் சுமந்தீர் தாங்க பெலன் குன்றி தவித்தீர் - ஐயா இந்த வேதனை தான் உமக்கேனோ
2ம் சரணம்
லோகத்தின் பாவம் தீர்க்கவோ சென்றீர் தியாகத்தின் பாதையைக் கடந்தீர்- ஐயா துன்ப சோதனை தான் உமக்கேனோ
3ம் சரணம்
பாவத்தின் நாசர் பாவியின் நேசர் பாவத்தில் வாழ்வோரை மீட்டீர் - ஐயா பல பாடுகள் தான் உமக்கேனோ
4ம் சரணம்
நன்மைகள் செய்து சுற்றி நடந்தீர் நம்பியே வந்தோரை அழைத்தீர் - ஐயா நித்தம் நிந்தைகள் தான் உமக்கேனோ
5ம் சரணம்
விண்ணையும் துறந்து எம்மையும் நினைத்தீர் வெண்ணங்கிதான் எமக்களித்தீர் - ஐயா வேந்தா செல்வங்கிதான் உமக்கேனோ
6ம் சரணம்
ஆம் இரத்த வேர்வை சிந்தியே அழுதீர் அன்று எமக்காக ஜெபித்தீர் - ஐயா ஆத்ம பாரமே தான் உமக்கேனோ