♪♫
TA-2204
Tamil
மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
Yesuvae Um Varavai Niththam
24
views
பல்லவி
இயேசுவே உம்மை நம்புவேன் நன்மையும் கிருபையும் தொடருமே உம் ஜீவனை எனக்காக ஈந்தீர் நீர் என் வாழ்வினில் நிரந்தரம் நீர் என்னை விட்டு நீங்கா பொக்கிஷம் நீர் என்னை விட்டு நீங்கா பொக்கிஷம்
1ம் சரணம்
நிந்தனைகள் நீக்கி நித்திய வழிகாட்டி அனுதினமும் என்னை நடத்திடுவீர் காயங்கள் ஆற்றி கறைகள் போக்கி நித்திய கன்மலையின் மேல் உயர்த்துவீர்
2ம் சரணம்
கலக்கங்கள் நீக்கி பயங்கள் போக்கி ஆதரித்து என்னை அனைத்திடுவீர் ஆத்துமாவை தேற்றி நீர் வாழ்வில் நடத்தி பகைங்கர் முன் என் தலையை உயர்த்தினீர்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.