TA-2210
Tamil

Yesuvin naam balatha

Yesuvin naam balatha

24
views
பல்லவி

இயேசுவின் நாமம் அதிசயமாமே என்றென்றும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன் என்னை விசாரிக்கும் அன்புள்ள இயேசுவே எப்போதும் என்னுள்ளம் ஜீவிக்கின்றார்

1ம் சரணம்

காடு மலையும் மேடானாலும் கர்த்தரே வழிகாட்டி நடத்தினார் இம்மானுவேல் அவர் என்னோடிருந்துமே இம்மட்டும் காத்ததால் ஸ்தோத்தரிப்பேன்

2ம் சரணம்

போக்கும் வரத்தும் ஆபத்திலும் காக்கும் தம் பலமான கரங்களே நம்பிடுவேனே நான் அண்டிடுவேன் நித்தம் நன்றி மறவாமல் ஸ்தோத்தரிப்பேன்

3ம் சரணம்

நிந்தை சுமந்த நேரங்களில் தந்தை தம் பெலமீந்து தேற்றினாரே என்னென்ன துன்பங்கள் இன்னும் வந்தாலுமே மென்மேலும் இயேசுவை ஸ்தோத்தரிப்பேன்

4ம் சரணம்

சோதனையான வியாதிகளில் வேதனை மரண படுக்கையிலும் சித்தம் நிறைவேற முற்றும் குணமாக்கி ஜீவன் அளித்ததால் ஸ்தோத்தரிப்பேன்

5ம் சரணம்

பாக்கியமான இரட்சிப்புமே பெற்றேன் இக்கானமான அழைப்புமே ஆனந்த தைலத்தின் வல்ல அபிஷேகம் அன்போடு ஈந்ததால் ஸ்தோத்தரிப்பேன்

6ம் சரணம்

என்று வருவார் என் இயேசுவே ஏங்கி என் மனமே தவித்திடுதே கற்புள்ள கன்னிகை கூட்டமுடன் சேர்ந்து கர்த்தரைக் கண்டு நான் ஸ்தோத்தரிப்பேன்

Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.