இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்
Yesuvin Varukaikkup Paalam Amaippoem
இயேசுவோடு இணைந்த வாழ்வினை தேடித் தெரிந்து கொண்டேன் - இதுவே தூயதேவ அன்பே - போதும் மாய உலகினிலே
மனித அன்பு மாறி மறையும் மாறிடாத தேவ அன்பே இணையில்லாத நல்ல பங்கே இதற்கு நிகர் எதுவும் - இல்லையே இம்மை மறுமையிலே
பஞ்சமோ, பசி, பட்டயமோ மிஞ்சும் துன்பம் தொல்லை வந்தும் கிறிஸ்துவின் அன்பை விட்டொன்றும் பறித்து பிரித்திடாதே - என்னையும் பரமன் கைவிடாரே
உலக ஆசை, பாவம் பெருக உண்மை நேர்மை எங்கும் இல்லை இதனைக் காணும் நீதிமான்கள் இதயம் நொறுங்கிடுதே - தினமும் கதறி ஜெபித்திடவே
எனது ஆவி, ஆத்மா தேகம் ஏசு சொந்தமாக கொண்டார் மரணமோ, என் ஜீவனோ நான் மகிமை மேல் மகிமை - அடைந்தே மகிபன் முகம் காண்பேன்
Lyrics are provided for reference only. All rights belong to respective owners. If you are a copyright holder and wish to request removal, please contact us.