TA-1894
Tamil

சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத்,

Saththiya

0
views
பல்லவி

சத்திய தேவனின் பூரண வாழ்வை அனுபவமாய் நான் பெறவேண்டும் - 2

1ம் சரணம்

தேவனே என்னை போதித்து நடத்தும் தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும் உத்தம பக்தர்கள் சூழ்ந்து நிற்க இயேசுவை நோக்கித் தொடர உதவும் - 2

2ம் சரணம்

துன்பங்கள் தொடர்ந்து வந்திட்ட போதும் துணிந்து நின்ற யோபுவைப்போல அனைத்து வளமும் அகன்று போனாலும் ஆபகூக் போல மகிழ்வேன் என்றும் - 2

3ம் சரணம்

கொண்டது அனைத்தையும் குப்பையாய்க் கண்ட இலட்சிய வீரர் பவுலினைப் போல இறுதிநாள் வரை உண்மையாயிருந்து அழியா மகுடம் முடிவாய்ப் பெறுவேன் - 2