♪♫
TA-2202
Tamil
இயேசுவே தெய்வம் என்றால்!
Yesuvae Theyvam Enraal
0
views
பல்லவி
இயேசுவே உம் சாயல் காண ஏங்குதே என் உள்ளம் இன்னும் என்று சேர்வேன் உந்தன் சமூகம் அன்றே தீருமே எந்தன் ஆவல்
1ம் சரணம்
தொல்லை மிகுந்த இவ்வுலகில் நல்ல துணையும் நீரல்லவோ! இன்னும் நானும் அண்டைச் சேர உன்னத பெலனை தாரும் ஐயனே
2ம் சரணம்
மாய உலகின் இன்பம் வெறுத்தேன் தூயனே சமுகம் வரவே ஆவி ஆத்மா தேகம் முற்றும் அர்ப்பணித்தேன் எந்தன் தேவனே
3ம் சரணம்
உமது வேதம் எனது மகிழ்ச்சி இரவும் பகலுமென் தியானமன்றோ! உமது மகிமை காண மேலும் கிருபை செய்வீர்! எந்தன் தேவனே
4ம் சரணம்
கானல் நீரைத் தேடி ஓடும் மானைப் போல கதறுகின்றேன் எந்தன் ஆத்மா உம்மைச் சேர கிருபை செய்வீர் ! எந்தன் தேவனே
5ம் சரணம்
பாரில் எந்தன் ஓட்டம் முடித்தே பரத்தில் வாசம் செய்திடுவேன் உமது சமூகம் சீயோன் அடைய உதவி செய்வீர் ! தேவ ஆவியே