TA-1634
Tamil

மனதுருகும் தெய்வமே இயேசய்யா

Manathurugum deivame

0
views
பல்லவி

மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மருவிய சோபன சுப வாழ்வு

1ம் சரணம்

துணைபிரியாது தோகையிம்மாது சுப மண மகளிவர் இதுபோது மணமுறை யோது வசனம் விடாது வந்தன ருமதருள் பெறவேது-நல்ல

2ம் சரணம்

ஜீவதயாபரா சிருஷ்டியதிகாரா தெய்வீக மாமண அலங்காரா தேவ குமாரா திருவெல்லையூரா சேர்ந்தவர்க்கருள் தராதிருப்பீரா-நல்ல

3ம் சரணம்

குடித்தன வீரம் குணமுள்ள தாரம் கொடுத்து கொண்டாலது சமுசாரம் அடக்கமாச்சாரம் அன்பு உதாரம் இம்புவி தனில் மனைக்கலங்காரம்