Sarvathiyum anbai
Sarvathiyum anbai
சர்வ வல்ல தேவனே நீர் சமாதான கர்த்தரே எல்ஷதாய் யெகோவா ஷாலோம் இயேசுவே எம்மை ஆசீர்வதியும்
பக்தியுள்ள குடும்பமாய் புத்தியுள்ள மனிதராய் சித்தியுள்ள காரியங்கள் நித்தம் நடந்திடவே சத்தியத்தைக் கைக்கொண்டே உத்தமமாய் ஜீவிப்போம்.
இயேசுவின் இரத்தம் சூழ்ந்திட இல்லத்தில் பயம் இல்லையே இஸ்ரவேலை காக்கும் தேவன் இராப்பகல் உறங்கார் தேவனின் செட்டை நிழலிலே தங்குவோம் சுகமாகவே
கர்த்தர் தங்கும் வீட்டினில் காலை மாலை ஜெப தொனி பரிசுத்தாவி எண்ணெய் ஊற்ற எரிந்து பிரகாசிப்போம் வேதமே இங்கு வெளிச்சமே வழி நடத்தும் தீபமே
அன்புடன் மிக ஐக்கியமாய் ஆறுதலாய் அமைதியாய் உண்மையோடு ஊக்கத்தோடு உழைத்து பிழைத்திடுவோம் கைகளின் பிரயாசத்தில் கர்த்தாவே பலன் தாருமே
வற்றிடாத நீரூற்றாய் வாடிடாத தோட்டமாய் வாசமலராய் கனிமரமாய் வாழ்ந்து வளம் பெறவே, நானும் என் வீட்டாருமோ நல்ல கர்த்தரை சேவிப்போம்
மீட்கப்பட்டோர் பாடுவோம் மகிழ்ச்சியோடு திரும்புவோம் சஞ்சலமும் தவிப்பும் நீங்கும் சீயோன் யாத்திரையில் வானுலகில் சேர்த்திட வேகம் வாரும் இயேசுவே