♪♫
TA-1299
Tamil
உம் கரம் பிடிக்க
Devanae neer thooramaay
0
views
பல்லவி
தேவனே உம் சிறகின் கீழ்வந்தேன் எந்தன் ஆத்துமா உம்மில் மகிழ்ந்து மேன்மை பாராட்டுமே நிரே என்றும் தஞ்சம் ஆனீரே!
1ம் சரணம்
காணாமல் போன ஆட்டை போல் திசை தவறி அலைந்திட்டேன் தேடி வந்து மீட்டுக் கொண்டீரே தோளின் மீது சுமந்து சென்றீரே
2ம் சரணம்
சிறகொடிந்த பறவை போல் குற்றுயிராக தவித்தேனே வல்ல கரத்தால் ஏந்தி கொண்டீரே மார்பில் அணைத்து ஆற்றி தேற்றினீர்
3ம் சரணம்
இயேசுவே உந்தன் நாமமே பலத்த துருகமானதே நேர்த்தியான இடங்களில் பங்கடைந்தேன் கண்ணின் மணிப்போல் காத்துக்கொள்வீரே !